"உடனுக்குடன் தகவல்களை பரிமாற உலகத்தைச் சுருக்கி உள்ளங்கையில் வைத்துள்ளது தகவல் தொழில்நுட்பம்" என்ற வரிகளுக்கேற்ப இனிவரும் காலங்களில் அரசியலும் தகவல் தொழில்நுட்பத்திற்குள் அடங்கி விடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
துறை சார்ந்த வளர்ச்சி மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கும் தகவல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
இதை உணர்ந்தே பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் IIT, NIT மாணவர்களோடு கைகோர்த்து தங்களின் கட்சி பற்றியான செயல்பாடுகளை டிஜிட்டல் விளம்பரங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்திய அளவில் இந்த கட்சிகள் தகவல் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழகத்தில் இக்கட்சிகளின் தகவல் தொழில்நுட்பத் தாக்கம் குறைவே.
தமிழகத்தில் முதல் முதலாக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை அதிமுக-வில் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா.
அதிமுக-வின் ஆதரவு இலக்கை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த அணிக்கு, மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவிந்த ராசு அவர்களின் மகன் திரு.சிங்கை ஜி.ராமச்சந்திரன் அவர்களை நியமித்தார் ஜெயலலிதா.
எவரும் கனவில் கூட நினைத்து பார்க்காத நேரத்தில், IIMA அகமதாபாத்தில் படித்த மிகச்சிறந்த மாணவரை மாநில செயலராக நியமித்து, புதிய உத்வேகத்தோடு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட ஆரமித்தது, அன்று மற்ற கட்சியினரை மட்டுமல்ல மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
அந்த அணி உருவாக்கப்பட்ட பின் மாவட்ட வாரியாக தலைவர்கள், செயலாளர்கள், துணை, இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த அணி தகவல் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி அதிமுக-வின் ஆதரவு எல்லையை அதிகப்படுத்தியது. இதன் பயனாக 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று வாகை சூடியது.
இந்த யுக்திகளை தாமதமாக உணர்ந்த எதிர்க்கட்சி திமுகவும் கடந்த ஒரு வருடமாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியை செயல்படுத்தி வருகிறது.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக-வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முற்றிலும் முடங்கி விட்டது, சிறப்பாக செயல்படவில்லை போன்ற வதந்திகள் அதிகமாகவே உலா வர ஆரமித்தன.
இதை பற்றி விசாரித்த போது, அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயலலிதா காலத்தில் இருந்த அதே உத்வேகத்தோடு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,
இதற்கென சென்னையில் கார்பரேட் அலுவலகத்தை போல் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு, அமைதியான சூழ்நிலையில், 30 க்கும் மேற்பட்ட திறமையான வேலையாட்களுடன் இயங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
இளைஞர்கள், மாணவர்கள், முதியோர்கள் என தனித்தனியாக பிரித்து ஒவ்வொருத்தருக்கும் தேவையான அரசின் நலத்திட்டங்களை கருத்து விளக்கப்படம் மூலம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
மொத்த வாக்குகளை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல் வயது, பாலினம், கல்வி, வேலைவாய்ப்பு, படித்தவர், படிக்காதவர், இளைஞர்கள், முதியோர் என 14 வகைகளாக பிரிக்கப்பட்டு களப்பணி ஆற்றி வருகிறது.
தொகுதி வாரியாக Whatsapp மூலம் மக்களை இணைப்பது, பூத் வாரியாக வகைபடுத்தி கழக தகவல்களை கணக்கெடுத்து தலைமையிடம் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை திறம்பட செய்து வருவதாககவும் மக்களால் பேசப்படுகிறது.
தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் உட்பட 22 அமைச்சர்கள் அன்றாடம் நடக்கும் அரசு நிகழ்வுகளை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் உடனுக்குடன் பதிவிட்டு மக்களோடு நேரடி தொடர்பில் உள்ளனர்.
இதுவரை பல்வேறு பயிற்சி வகுப்புகள்கள் நடத்தப்பட்டு 10000 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை ட்விட்டர் கணக்கிற்குள் வரவழைக்கப்பட்டு "AIADMK TWITTER ARMY" என்ற மிகப்பெரிய ட்விட்டர் பக்கத்தையும் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை பற்றி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு.சிங்கை ஜி.ராமச்சந்திரன் அவர்களிடம் பேசிய போது,
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன், தலைமை வழிகாட்டுதல் படி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், கட்சிக் கொள்கைகளின் விளைவை அதிகரிப்பதிலும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கை கொண்டுள்ளது.
வருகின்ற 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை சந்திப்பதற்கு தேவையான அனைத்து யுக்திகளையும் கையாண்டு தயார் நிலைப்படுத்தி வருகிறோம். இது பற்றிய தகவல்களை தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
வருகின்ற தேர்தல் மட்டுமல்ல இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்ள அஇஅதிமுக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதை பற்றியான கருத்தை மக்களிடம் கேட்ட போது, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் விளக்கப்படங்களால் அரசின் நலத்திட்டம் பற்றிய தகவல்கள் நேரடியையாக மக்களை வந்தடைகிறது. மக்களுக்கும் தமிழக அரசிற்கும் இடையே ஒரு சுமூக பாலமாக அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது என்றனர்.
எது எப்படியோ அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முடங்கிவிட்டது என்ற வதந்தி தற்போது பொய்யாகியுள்ளது.
இதற்கான முடிவு எதிர்வரும் தேர்தலில் தான் தெரியவரும்.
நன்றி!!
சிங்கை ஜி இராமச்சந்திரன்
Singanallur MLA | Voter ID Registraion in Singanallur | Online apply for voter id card in Singanallur | Voter id verification in Singanallur | Online pan card service in Singanallur | Apply smart card in Singanallur | Smart card service in Singanallur