Showing posts with label aiadmk itwing. Show all posts
Showing posts with label aiadmk itwing. Show all posts

Thursday, 24 December 2020

IIM grad prefers politics to placements



G. Ramachandran (27) completed his MBA from Indian Institute of Management- Ahmedabad in March this year and his career plans are not the same as his batch mates.

He decided not to take part in the institute’s placement programme as he wants to pursue a career in politics. Son of late P. Govindaraj (also known as Singai Govindarajan), who was MLA of Singanallur Assembly constituency from 1991 to 1996, Mr. Ramachandran is a member of the youth wing of AlADMK.

He completed his school and college studies in Coimbatore and worked in a start-up firm here for three years before joining the IIM-A.

Mr. Ramachandran joined the youth wing of the party nearly seven years ago and since then he has taken part in party activities whenever he had time. Even when he came home last year for summer vacation, he had taken part in the party’s election campaign.

 

“As a member of the youth wing, I had taken part in election campaigns and party activities earlier too,” he says.

Tough call

“It was a tough call not to take part in the placement process as it meant choosing not to take a job that was readily available. Also, I need to support my family. But, I want to make an impact, work for the society. Hence, I decided to continue working for the party full-time,” he says.

He plans to start a canteen from July this year at a private college here and develop it as theme-based one.

While this will be the “economic engine” to meet his family’s financial needs, he wants to reach out and network with youngsters who are interested in joining politics, leverage technology to take the Government initiatives to the people, and work on youth employment and education.

In his second year, he chose electives related to communication as he had already decided to have a career in politics after completing the course.

He plans to meet the AIADMK district leaders to request them for an opportunity to work for the party. “If given an opportunity, I would like to work in technology-related areas, train youth, and get involved in youth employment and education since I have the experience in these areas,” he says.

 

Saturday, 10 October 2020

Singai G Ramachandran - Sowripalayam Office








     We offer Free Service in Sowriplayam office, Coimbatore. People can use this offer  of free service, It provide for Paying Electricity bill , House tax, water tax, dish recharge, EC patta , PF and other online bill payment.





This office offer also Applying government related certificate that PAN, Smart card, Voter ID apply and Correction, Birth certificate, Death certificate, Community certificate, Income certificate, Widow certificate, First graduate certificate, employment certificate and government certificates.


 We are eager to listen and rectify your grievances in Singanallur Constituency related to drinking water, salt water, streetlight, drainage, litter bins, road and other grievances that we can be of any help. Please feel free to WhatsApp your grievances to our contact number. 













Thank you! Looking forward to serve you!




Thursday, 8 October 2020

Singai G Ramachandran - Singanallur Office




        This office offers free service for paying Electricity bill, House tax, Water tax and other online bill payments, Application of Smart Card, Voter ID, Community Certificate, Income Certificate, Widow certificate, First Graduate Certificate and other Government certificates. 


         We are eager to listen and rectify your grievances in Singanallur Constituency related to drinking water, salt water, streetlight, drainage, litter bins, road and other grievances that we can be of any help. Please feel free to WhatsApp your grievances to our contact number. 





                  Thank you! Looking forward to serve you! 


Singai G Ramachandran
MLA of Singanallur Constituency


Service in Singanallur 




Saturday, 26 September 2020

DO WHISTLE புதிய App அறிமுகம்!!












திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற, பல மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டும் எதிர்பாராத விதமாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. 


இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை, திறந்தவெளி, நீர்உறிஞ்சிக் கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தவிட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? எனவும், இதில் கவனக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை வகுத்த பாதையில் செயல்படும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்றி மக்கள் சேவையாற்ற களத்தில் இறங்கியுள்ளது. இதெற்கென அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் "DO WHISTLE" என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலில் பொதுமக்கள் "DO WHISTLE" என்ற செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து, தங்களை பற்றிய தகவல்களை இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.


நமது ஊரில் அல்லது நமது ஊருக்கு அருகாமையில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் இருந்தால், கிணறு அமைந்துள்ள இடத்தில் இருந்து, செயலியில் உள்ள "FOUND AN UNUSED WELL" என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.


நம்முடைய இந்த செயல் மூலம் தமிழகம் முழுவதும்  எந்தெந்த இடங்களில் தேவையற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன என்ற தகவல்கள் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு வந்தடையும்.


தகவல் பெறப்பட்டவுடன் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சமூக வலைதள நண்பர்களின் உதவியோடு ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றித்தருவார்கள்.





இது குறித்து அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திரு.சிங்கை G. ராமச்சந்திரன் அவர்கள் பேசியதாவது,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் வழியில் இயங்கும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்றும் முயற்சியில் "DO WHISTLE" என்ற புது யுக்தியைக் கையாண்டுள்ளது. இந்த செயலி மூலம் மக்கள் தகவல்களை தெரிவித்தால் மக்களுக்காக சேவையாற்ற எமது நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள். "மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்" என்றார்.


சிங்கை ஜி ராமச்சந்திரன்

நன்றி!!!


Singanallur MLAVoter ID Registraion in SinganallurOnline apply for voter id card in singanallurVoter id verification in SinganallurOnline pan card service in SinganallurApply smart card in SinganallurSmart card service in Singanallur 



Friday, 25 September 2020

அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு - தமிழ்நாடு



 "உடனுக்குடன் தகவல்களை பரிமாற உலகத்தைச் சுருக்கி உள்ளங்கையில் வைத்துள்ளது தகவல் தொழில்நுட்பம்" என்ற வரிகளுக்கேற்ப இனிவரும் காலங்களில் அரசியலும் தகவல் தொழில்நுட்பத்திற்குள் அடங்கி விடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.


துறை சார்ந்த வளர்ச்சி மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கும் தகவல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.


இதை உணர்ந்தே பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள்  IIT, NIT மாணவர்களோடு கைகோர்த்து தங்களின் கட்சி பற்றியான செயல்பாடுகளை டிஜிட்டல் விளம்பரங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.


இந்திய அளவில் இந்த கட்சிகள் தகவல் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழகத்தில் இக்கட்சிகளின் தகவல் தொழில்நுட்பத் தாக்கம் குறைவே.


தமிழகத்தில் முதல் முதலாக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை அதிமுக-வில் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா.


அதிமுக-வின் ஆதரவு இலக்கை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த அணிக்கு, மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவிந்த ராசு அவர்களின் மகன் திரு.சிங்கை ஜி.ராமச்சந்திரன் அவர்களை நியமித்தார் ஜெயலலிதா.


எவரும் கனவில் கூட நினைத்து பார்க்காத நேரத்தில், IIMA அகமதாபாத்தில் படித்த மிகச்சிறந்த மாணவரை மாநில செயலராக நியமித்து, புதிய உத்வேகத்தோடு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட ஆரமித்தது, அன்று மற்ற கட்சியினரை மட்டுமல்ல மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.


அந்த அணி உருவாக்கப்பட்ட பின் மாவட்ட வாரியாக தலைவர்கள், செயலாளர்கள், துணை, இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


இந்த அணி தகவல் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி அதிமுக-வின்  ஆதரவு எல்லையை அதிகப்படுத்தியது. இதன் பயனாக 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று வாகை சூடியது.


இந்த யுக்திகளை தாமதமாக உணர்ந்த எதிர்க்கட்சி திமுகவும் கடந்த ஒரு வருடமாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியை செயல்படுத்தி வருகிறது.


ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக-வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முற்றிலும் முடங்கி விட்டது, சிறப்பாக செயல்படவில்லை போன்ற வதந்திகள் அதிகமாகவே உலா வர ஆரமித்தன.


இதை பற்றி விசாரித்த போது, அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயலலிதா காலத்தில் இருந்த அதே உத்வேகத்தோடு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,


இதற்கென சென்னையில் கார்பரேட் அலுவலகத்தை போல் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு, அமைதியான சூழ்நிலையில்,  30 க்கும் மேற்பட்ட திறமையான வேலையாட்களுடன் இயங்குவதாகவும் தெரியவந்துள்ளது.


இளைஞர்கள், மாணவர்கள், முதியோர்கள் என தனித்தனியாக பிரித்து ஒவ்வொருத்தருக்கும் தேவையான அரசின் நலத்திட்டங்களை கருத்து விளக்கப்படம் மூலம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.


மொத்த வாக்குகளை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல் வயது, பாலினம், கல்வி, வேலைவாய்ப்பு, படித்தவர், படிக்காதவர், இளைஞர்கள், முதியோர் என 14 வகைகளாக பிரிக்கப்பட்டு களப்பணி ஆற்றி வருகிறது.


தொகுதி வாரியாக Whatsapp மூலம் மக்களை இணைப்பது, பூத் வாரியாக வகைபடுத்தி கழக தகவல்களை கணக்கெடுத்து  தலைமையிடம் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை திறம்பட செய்து வருவதாககவும் மக்களால் பேசப்படுகிறது.


தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் உட்பட 22 அமைச்சர்கள் அன்றாடம் நடக்கும் அரசு நிகழ்வுகளை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் உடனுக்குடன் பதிவிட்டு மக்களோடு நேரடி தொடர்பில் உள்ளனர்.


இதுவரை பல்வேறு பயிற்சி வகுப்புகள்கள் நடத்தப்பட்டு 10000 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை ட்விட்டர் கணக்கிற்குள் வரவழைக்கப்பட்டு "AIADMK TWITTER ARMY" என்ற மிகப்பெரிய ட்விட்டர் பக்கத்தையும் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதை பற்றி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்  திரு.சிங்கை ஜி.ராமச்சந்திரன் அவர்களிடம் பேசிய போது,


மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன், தலைமை வழிகாட்டுதல் படி  அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், கட்சிக் கொள்கைகளின் விளைவை அதிகரிப்பதிலும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கை கொண்டுள்ளது.


வருகின்ற 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை சந்திப்பதற்கு தேவையான அனைத்து யுக்திகளையும் கையாண்டு தயார் நிலைப்படுத்தி வருகிறோம். இது பற்றிய தகவல்களை தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.


வருகின்ற தேர்தல் மட்டுமல்ல இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்ள அஇஅதிமுக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதை பற்றியான கருத்தை மக்களிடம் கேட்ட போது, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் விளக்கப்படங்களால் அரசின் நலத்திட்டம் பற்றிய தகவல்கள் நேரடியையாக மக்களை வந்தடைகிறது. மக்களுக்கும் தமிழக அரசிற்கும் இடையே ஒரு சுமூக பாலமாக  அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது என்றனர்.


எது எப்படியோ  அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முடங்கிவிட்டது என்ற வதந்தி தற்போது பொய்யாகியுள்ளது.

இதற்கான முடிவு எதிர்வரும் தேர்தலில் தான் தெரியவரும்.


நன்றி!!


சிங்கை ஜி இராமச்சந்திரன் 

Singanallur MLAVoter ID Registraion in SinganallurOnline apply for voter id card in Singanallur | Voter id verification in SinganallurOnline pan card service in SinganallurApply smart card in SinganallurSmart card service in Singanallur

Tuesday, 22 September 2020

 அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 


                       




தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ( AIADMK IT Wing ) பல யுக்திகளை கையாண்டு தேர்தல் களத்தை மிகச்சிறப்பாக சந்தித்தது.


அதே போன்ற ஒரு புதிய யுக்தியை சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கையாண்டுள்ளது. சூலூர் இடைத்தேர்தலில் தொகுதி மக்களை கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் "Bike TV" என்ற புதிய concept யை அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த புது யுக்தியை இரு நாட்களுக்கு முன்பு, அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திரு.சிங்கைG.ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.  


இந்த டி.வி.யின் சிறப்பம்சம் என்னவென்றால்,

1. இது பிரத்தேக தகவல் தொழில்நுட்பத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. ஒரு முறை Charge செய்தால் போதும் சுமார் ஆறு மணி நேரம் வரை நாம் இதை பயன்படுத்தலாம்.

3. இதோடு Mic connect செய்து சுமார் 200 நபர்கள் இருக்கும் இடத்தில் Public Address system மாகவும் பயன்படுத்தலாம்.

4. Remote மற்றும் Wi-Fi வசதிகளும் இந்த TV யில் அடங்கியுள்ளன. 


இவ்வாறு பல பிரத்தேக வசதிகளோடு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கையாண்டுள்ள இந்த புதிய யுக்திக்கு சூலூர் தொகுதி மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தொகுதி மக்களிடையே இந்த புதிய யுக்தி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 


இதே போல் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் www.biketv.in என்ற புதிய இணையதளத்தையும் வெளியிட்டு மக்களின் குறைகளை வேட்பாளரிடம் கூறுவதற்கும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழிவகை செய்துள்ளது.


கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில், "அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க திமுகவுக்கு வாக்களிக்காதீங்க", "ஏன் பொங்கலூர் பழனிசாமிக்கு வாக்களிக்க கூடாது" போன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டது தொகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.


AIADMK IT Wing Tamilnadu 




Tuesday, 10 March 2020

சிங்கை இராமச்சந்திரனின் கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கை!!


       




       ஜி. ராமச்சந்திரன் (27) இந்த ஆண்டு மார்ச் மாதம் அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் தனது எம்பிஏ முடித்தார், மேலும் அவரது தொழில் திட்டங்கள் அவரது தொகுதி தோழர்களைப் போலவே இல்லை. அவர் அரசியலில் ஒரு தொழிலைத் தொடர விரும்புவதால் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு திட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தார்.

               1991 முதல் 1996 வரை சிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த பி.கோவிந்தராஜின் மகன் (சிங்கை கோவிந்தராஜன் என்றும் அழைக்கப்படுபவர்) திரு.ராமச்சந்திரன் அஇஅதிமுக இளைஞர் பிரிவில் உறுப்பினராக உள்ளார். கோயம்புத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர், ஐ.ஐ.எம்-ஏ-யில் சேருவதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் இங்கு ஒரு தொடக்க நிறுவனத்தில் பணிபுரிந்தார். திரு. ராமச்சந்திரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் இளைஞர் பிரிவில் சேர்ந்தார், அதன் பின்னர் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
 
        கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்காக அவர் வீட்டிற்கு வந்தபோதும், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். "இளைஞர் பிரிவின் உறுப்பினராக, நான் தேர்தல் பிரச்சாரங்களிலும் கட்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்றேன்," என்று அவர் கூறுகிறார். கடினமான அழைப்பு "வேலைவாய்ப்பு பணியில் பங்கேற்க வேண்டாம் என்பது ஒரு கடினமான அழைப்பாகும், ஏனெனில் இது உடனடியாக கிடைக்கக்கூடிய ஒரு வேலையை எடுக்க வேண்டாம் என்று தேர்வுசெய்கிறது. மேலும், நான் எனது குடும்பத்தை ஆதரிக்க வேண்டும். ஆனால், நான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன், சமூகத்திற்காக உழைக்க வேண்டும். எனவே, கட்சிக்காக முழுநேரமும் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்தேன், ”என்று அவர் கூறுகிறார்.

   இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த ஆண்டு ஜூலை முதல் ஒரு கேண்டீனைத் தொடங்கவும், அதை தீம் அடிப்படையிலான ஒன்றாக உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இது தனது குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார இயந்திரம்ஆக இருக்கும்போது, ​​அரசியலில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களை அணுகவும், நெட்வொர்க் செய்யவும், அரசாங்கத்தின் முன்முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் பணியாற்றவும் அவர் விரும்புகிறார் .

  தனது இரண்டாம் ஆண்டில், தகவல்தொடர்பு தொடர்பான தேர்வுகளைத் தேர்ந்தெடுத்தார், ஏனெனில் அவர் ஏற்கனவே படிப்பை முடித்த பின்னர் அரசியலில் ஒரு தொழிலைப் பெற முடிவு செய்திருந்தார். அதிமுக மாவட்டத் தலைவர்களைச் சந்தித்து கட்சிக்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பைக் கோருவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். "ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், தொழில்நுட்பம் தொடர்பான பகுதிகளில் பணியாற்றவும், இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கவும், இந்த பகுதிகளில் எனக்கு அனுபவம் இருப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஈடுபடவும் விரும்புகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

நன்றி!!


Tuesday, 3 March 2020

அஇஅதிமுக கழக தகவல் தொழில் நுட்ப பிரிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!!













தீர்மானம் 1

“அஇஅதிமுக கழகம் தான் உண்மையான மக்கள் இயக்கம்
மக்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இயக்கம்
மக்களுக்காகவே தன்னை அர்பணித்த தலைவியைக் கொண்ட
ஒரு இயக்கம்”  என தவவாழ்வு வாழ்ந்த தங்கத்தாரகை, இந்தியாவின் இரும்புமங்கை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, ஒரு அரசியல் இயக்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை தமிழகத்தில் முதன் முதலாக உருவாக்கினார்கள்.
“எங்கும் கணினி எதிலும் கணினி”யாக மாறிவிட்ட இந்த தொழில்நுட்ப யுகத்தில் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் ஆப், டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் சமூக ஊடக பயனர்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும், கழகத்தின் கொள்கைகளின் விளைவை அதிகரிப்பதிலும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு முக்கிய பங்கை கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கடந்த  நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில், கழக அரசின் சாதனைகளை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
இவ்வாறு கழகப்பணிகளை சிறப்பாக செய்து கழக அரசின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வரும் கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவினை கழக சட்ட விதியின் கீழ் அதிகாரப்பூர்வமாக கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்த கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு..பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது!


தீர்மானம் 2

என் மக்கள் எதற்காகவும்,
எப்போதும், யாரிடமும் கையேந்தி நிற்காத
காலத்தை உருவாக்குவதே
என் வாழ்நாள் லட்சியம்'' - என்று சூளுரைத்த வெற்றித்திருமகள்!

 தமிழர் தம் வாழ்வு செழிக்க தம் வாழ்வையே அர்ப்பணித்து,

வாடும் ஏழைகளுக்கு வீடுதோறும் விலையில்லா அரிசி தந்தும்,
ஏழைத் தொழிலாளிக்கு என்.எல்.சி உரிமையைக் காத்துத் தந்தும்,
கழனிவாழ் உழவர்க்கு காவேரி, முல்லைப்  பெரியாறை மீட்டுத் தந்தும்,
ஆடு-மாடுகளை விலையில்லாது அள்ளித் தந்தும்,
வேளாண்மை காத்திட்ட வீரமங்கை!

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தவ வாழ்வு வாழ்ந்த மாதரசி, நமது கழகத்தின் காவல் தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை (24.02.2020) முன்னிட்டு தமிழகம் முழுவதும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக மாணவச்செல்வங்களுக்கு பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், கல்வி சார்ந்த உபகரணப்பொருட்களை வழங்குதல், இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஏழைகளுக்கு  அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் தீர்மானிக்கப்படுகிறது!



தீர்மானம் 3

பெண்குழந்தைகளை பெற்றவளே மறந்து கைவிட்டாலும் உச்சி முகர்ந்து, வளர்த்து ஆளாக்கியவர்” நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

“தாய்க்குத் தான் ஒரு பிள்ளையின் அருமை புரியும்”; அதைப்போலத் தன் குழந்தைகளுக்கு தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தீட்டி, “ஆண் பிறந்தால் வாழும், பெண் பிறந்தால் சாகும்” என்ற அவலநிலையை மாற்றிய தீர்க்கத்தரசி நமது அம்மா அவர்கள்!

“பத்துகோடி தமிழினமும் பாசத்தோடு அம்மா” என அழைத்த, தங்கமங்கை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதியை,  “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” அறிவித்து, மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளை நாடு போற்றும் வகையிலும்,

பெற்றோர் இல்லாத ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவடையும் பொழுது அவர்தம் வங்கிக்கணக்கில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தொகையினை வழங்க, சட்டப்பேரவை விதி எண் 110 – ன் கீழ் அறிவித்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது இதயங்கனிந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது!

தீர்மானம் 4

“எங்களுடைய திட்டங்கள் எங்களுடைய செயல்பாடுகள் எல்லாமே மக்களுக்காகத் தான்” என வீரமுழக்கம் இட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது ஆளுமையாலும், யாரும் எண்ணிடாத மக்கள் நலத்திட்டங்களாலும் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கினார்கள்.

அவர்களது வழியில் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் கழகத்தின் வெற்றி மகுடத்திற்கு கிடைத்த புதிய மைல்கல் தான் “நல்லாளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம்” என்னும் சிறப்பு அந்தஸ்து.

மத்திய நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள நிர்வாகத் திறன் குறியீட்டுப் பட்டியலில், ஒட்டுமொத்தப் பிரிவில் தமிழகம் முதலிடம், நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பில் முதலிடம், பொது சுகாதாரத்துறையில் இரண்டாமிடம், சுற்றுச்சூழல் பிரிவில் மூன்றாமிடம், மனிதவள மேம்பாட்டில் ஐந்தாம் இடம் என பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னோடி தரவரிசைகளை தமிழகம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுபோன்ற சரித்திர சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி இது  மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மையான மக்களாட்சியின் தொடர்ச்சி என்பதனை  மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பப்பிரிவு தனது பாராட்டுகளையும், நன்றிகளையும் மனதார தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம் 5

கழனியும், கணினியும் ஒருசேரத் தழைத்திட,
மண்ணுக்கு நீரும், மாணவர்க்கு மடிக்கணினியும் தந்த
மாதரசி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களது    

வழியில் விவசாயத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கயவர்களின் திமுக – காங்கிரஸ் கொடிய அரசால் அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் அழிவுத்திட்டத்தை அழித்து, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான “காவிரி டெல்டா பகுதிகளைப் "பாதுகாக்கப்பட்ட" வேளாண்மண்டலமாக” அறிவித்து, ஏரோட்டும் உழவனின் கண்ணில் நீரோட்டம் தடுத்த தலைமகனாக, உழவன் சிரித்தால் உலகம் சிரிக்கும் என்பதை நிலைநாட்டிய, விவசாயிகளின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், இத்தகைய சரித்திர திட்டத்தை நிறைவேற்ற பக்கபலமாய் விளங்கும் தங்கத்தமிழ்மகன் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது நன்றிகளை காணிக்கையாக்கி பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறது.

தீர்மானம் 6

“எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்பதை உறுதியுடன் உரைத்திட்ட தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவாய் மொழியினை மெய்ப்பிக்கும் வகையில், இன்று அழிந்து விடும், நாளை அழிந்து விடும் என வாய்ச்சவடால் விடுபவர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பல சாதனைகளை நிகழ்த்தி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியோடு தொடர்ந்து நான்காவது ஆண்டாக எழுச்சியோடு வீறுநடை போடுகின்ற விவசாயிகளின் விடிவெள்ளி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! என கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நெஞ்சார்ந்த நன்றியோடு பாராட்டுகிறது!

இந்த மூன்று ஆண்டுகளில் சரித்திர சாதனைகளைப் படைக்க  உறுதுணையாக இருந்த ஜல்லிக்கட்டு நாயகன்  மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி மலர்களை கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சமர்ப்பிக்கிறது.

தீர்மானம் 7

 “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதில் இம்மியளவும் மாறாமல்  தொடர்ந்து தமிழர் வாழ்வு செழிக்க, தொலைநோக்கு பார்வையோடு வளர்ச்சித்திட்டங்களை வகுத்துவரும் கழக அரசின், நாடுபோற்றும் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் உடனுக்குடன் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச்சென்று கழக அரசின் ஓட்டுவங்கியை அதிகரிக்கும் ஒற்றை இலக்கோடு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வரும் உள்ளாட்சித்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போது முதலே தொடங்கியிருக்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, புதிய தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு, வாக்காளர்களை வகைப்படுத்தி, மாவட்ட வாரியாக வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், டிவிட்டர், YouTube, Instagram, Share chat, Helo, Telegram, linkedIn உள்ளிட்ட பல சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம்   நமது கழக அரசின் சாதனைகள் மற்றும் தரவரிசைப்பட்டியல்களை அடித்தட்டு சாமானிய மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில் பணியாற்ற முடிவு செய்துள்ளது.
தமிழர் தம் வாழ்வு செழிக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த கழக இரு பெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொடுத்துச் சென்ற கழகத்தை கண் துஞ்சாமல் பாதுகாத்து வருகிற இரட்டைக்குழல் துப்பாக்கியாம் கழக ஒருங்கிணப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வழியில்,
“எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என மாண்புமிகு அம்மா அவர்கள் சூளுரைத்த வார்த்தைகளை நெஞ்சில் விதைத்து, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அல்லும் பகலும் அயராது பாடுபடும் என சபதமேற்கிறது!

நன்றி