Tuesday, 22 September 2020

 அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 


                       




தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ( AIADMK IT Wing ) பல யுக்திகளை கையாண்டு தேர்தல் களத்தை மிகச்சிறப்பாக சந்தித்தது.


அதே போன்ற ஒரு புதிய யுக்தியை சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கையாண்டுள்ளது. சூலூர் இடைத்தேர்தலில் தொகுதி மக்களை கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் "Bike TV" என்ற புதிய concept யை அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த புது யுக்தியை இரு நாட்களுக்கு முன்பு, அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திரு.சிங்கைG.ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.  


இந்த டி.வி.யின் சிறப்பம்சம் என்னவென்றால்,

1. இது பிரத்தேக தகவல் தொழில்நுட்பத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. ஒரு முறை Charge செய்தால் போதும் சுமார் ஆறு மணி நேரம் வரை நாம் இதை பயன்படுத்தலாம்.

3. இதோடு Mic connect செய்து சுமார் 200 நபர்கள் இருக்கும் இடத்தில் Public Address system மாகவும் பயன்படுத்தலாம்.

4. Remote மற்றும் Wi-Fi வசதிகளும் இந்த TV யில் அடங்கியுள்ளன. 


இவ்வாறு பல பிரத்தேக வசதிகளோடு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கையாண்டுள்ள இந்த புதிய யுக்திக்கு சூலூர் தொகுதி மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தொகுதி மக்களிடையே இந்த புதிய யுக்தி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 


இதே போல் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் www.biketv.in என்ற புதிய இணையதளத்தையும் வெளியிட்டு மக்களின் குறைகளை வேட்பாளரிடம் கூறுவதற்கும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழிவகை செய்துள்ளது.


கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில், "அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க திமுகவுக்கு வாக்களிக்காதீங்க", "ஏன் பொங்கலூர் பழனிசாமிக்கு வாக்களிக்க கூடாது" போன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டது தொகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.


AIADMK IT Wing Tamilnadu 




No comments:

Post a Comment