திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற, பல மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டும் எதிர்பாராத விதமாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தலைமை வகுத்த பாதையில் செயல்படும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்றி மக்கள் சேவையாற்ற களத்தில் இறங்கியுள்ளது. இதெற்கென அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் "DO WHISTLE" என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில் பொதுமக்கள் "DO WHISTLE" என்ற செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து, தங்களை பற்றிய தகவல்களை இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
நமது ஊரில் அல்லது நமது ஊருக்கு அருகாமையில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் இருந்தால், கிணறு அமைந்துள்ள இடத்தில் இருந்து, செயலியில் உள்ள "FOUND AN UNUSED WELL" என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
நம்முடைய இந்த செயல் மூலம் தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் தேவையற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன என்ற தகவல்கள் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு வந்தடையும்.
தகவல் பெறப்பட்டவுடன் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சமூக வலைதள நண்பர்களின் உதவியோடு ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றித்தருவார்கள்.
இது குறித்து அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திரு.சிங்கை G. ராமச்சந்திரன் அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் வழியில் இயங்கும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்றும் முயற்சியில் "DO WHISTLE" என்ற புது யுக்தியைக் கையாண்டுள்ளது. இந்த செயலி மூலம் மக்கள் தகவல்களை தெரிவித்தால் மக்களுக்காக சேவையாற்ற எமது நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள். "மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்" என்றார்.
நன்றி!!!
Singanallur MLA | Voter ID Registraion in Singanallur | Online apply for voter id card in singanallur | Voter id verification in Singanallur | Online pan card service in Singanallur | Apply smart card in Singanallur | Smart card service in Singanallur
No comments:
Post a Comment